யாழில் மர்ம நபர்களின் அடாவடி! ஆபத்தான நிலையில் இளைஞன்

யாழில் மர்ம நபர்களின் அடாவடி! ஆபத்தான நிலையில் இளைஞன்

கொழும்புத்துறை பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்புத்துறை பகுதியில் நேற்று இனந்தெரியாத நபர்களால் ஒருவர் மீது வாள் வெட்டுத் தாக்குதல் இடம்பெற்றது. இதில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இந்த சம்பவத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் நாவாந்துறை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.