கொள்கை விளக்க உரையை நிகழ்த்த ஆரம்பித்தார் ஜனாதிபதி...! {நேரலை}
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் கொள்கை விளக்க உரையை நிகழ்த்துவதற்கு ஆரம்பித்துள்ளார்.
9 ஆவது நாடாளுமன்றம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்படமை குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்றத்தை அங்குரார்ப்பணம் செய்வதற்கு ஜனாதிபதி பிரவேசித்த போது, மரியாதை வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு, வாகன அணிவகுப்பும் இடம்பெறும்.
ஆனால், இந்த முறை அவ்வாறு இடம்பெறாமல், முப்படையினரின் பங்களிப்புடன் கலாசார நடனத்துடன் நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.