எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி

எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவி நியமனம் குறித்து தீர்மானம் மேற்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்றக் குழு இன்று பிற்பகல் 2 மணியளவில் கூடவுள்ளது.

நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் உள்ள எதிர்க்கட்த் தலைவர் காரியாலயத்தில் இந்தக் கூட்டம் இடம்பெறவுள்ளது.

நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் பதவிக்காக, கலாநிதி ஹர்ஷ டி சில்வா மற்றும் கயந்த கருணாதிலக்க ஆகியோரின் பெயர்கள் பிரேரிக்கப்பட்டுள்ளன.

அவர்களில் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்கவின் கயந்த கருணாதிலக்கவின் பெயர் முன்னிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில், ஆளும்கட்சியின் பிரதான அமைப்பாளராக கயந்த கருணாதிலக்க செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.