அஞ்சல் திணைக்களத்தில் தேங்கிக் கிடக்கும் பெருமளவான பொதிகள்! காரணம் இதுதான்

அஞ்சல் திணைக்களத்தில் தேங்கிக் கிடக்கும் பெருமளவான பொதிகள்! காரணம் இதுதான்

மலேசியாவில் இருந்து அனுப்பப்பட்ட 880 பொதிகள் அஞ்சல் திணைக்களத்தில் தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதிகளில் உள்ள முகவரிகள் அழிந்தமையின் காரணமாக குறித்த பொதிகள் அஞ்சல் திணைக்களத்தில் தேங்கி கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையம் மூலம் கொள்முல் செய்யப்பட்ட பொதிகளே, கொரோனா தொற்று காரணமாக நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக இவ்வாறு தேங்கிக் கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p><p>குறித்த பொதிகளுக்கான முகவரியை கண்டுப்பிடிப்பதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக அஞ்சல் திணைக்களம் கூறியுள்ளது.

முன்னதாக மலேசியாவில் இருந்து வந்த 45 ஆயிரம் பொதிகள் முகவரிகள் அழிவடைந்த நிலையில், அஞ்சல் திணைக்களத்தில் தேங்கிக் கிடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பொதிகளில் காணப்படும் barcodeஐ பயன்படுத்தி முகவரிகளை கண்டுப்பிடிக்க உதவுமாறு மலேசிய அஞ்சல் துறையினரை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இந்த பொதிகள் எவையும் திருடப்படவில்லை என அஞ்சல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.