அரச வங்கிகளின் முறைகேடுகள் தொடர்பில் ஆராய புதிய குழு நிமயனம்...!
கடந்த 05 வருடங்களாக அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகேடுகள் மற்றும் பயனற்ற செயற்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பத்திரத்திற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்புவதற்கான வழிமுறைகள் தொடர்பில் ஆராயவும், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் அரச வங்கிகளில் இடம்பெற்ற முறைகெடுகள் மற்றும் மோசடிகள் தொடர்பில் ஆராய்வதற்காகவும் இந்த 04 பேர் கொண்டு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.