சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்று..

சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்று..

சர்வதேச ரீதியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 2 லட்சத்து 48 ஆயிரத்து 751 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் 6 ஆயிரத்து 134 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் அமெரிக்காவில் ஆயிரத்து 225 பேரும், பிரேஷிலில் ஆயிரத்து 365 பேரும் இந்தியாவில் ஆயிரத்து 98 பேரும் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 22 லட்சத்து 92 ஆயிரத்து 259 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் 7 லட்சத்து 83 ஆயிரத்து 338 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் சர்வதேச ரீதியில் தொற்றுறுதியான ஒரு கோடியே 50 லட்சத்து 29 ஆயிரத்து 270 பேர் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.