தேசிய பட்டியல் உறுப்பினர் விடயம் தொடர்பில் இன்றும் விசேட கலந்துரையாடல்...!
சர்ச்சைக்குறிய விடயமாக மாறியுள்ள எங்கள் மக்கள் சக்தி கட்சியின் தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரை தெரிவு செய்வது தொடர்பான கலந்துரையாடலில் ஈடுபட அந்த கட்சியின் உறுப்பினர்கள் சிலர் இன்று தேர்தல்கள் ஆணையகத்திற்கு சென்றுள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பில் இன்றைய தினம் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
நேற்றைய தினமும் குறித்த இரு தரப்பினருக்குமிடையில், கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.<br /><br />இந்த வியடம் தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் சட்ட மா அதிபரிடமும் கலநடதுரையாடி இருந்ததாக கூறப்பட்டுள்ளது.
இதன்போது சட்ட மா அதிபர் தேர்தல்கள் ஆணையகத்திற்குள் இது தொடர்பில் கலந்துரையாடி இறுதி தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டிருந்தார்.