பெரும்பான்மையானவர்கள் 50 வயதுக்கு குறைந்தவர்கள்
நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் 50 வயதுக்கு குறைந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
இம் முறை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டவர்களில் 50 வயதுக்கு குறைந்தவர்கள் 87 பேர் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டள்ளவர்களின் தகவல் தற்பொது நாடாளுமன்ற அதிகாரிகள் மூலம் Online முறைமையில் பெறப்பட்ட நிலையில் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கமைய 30 வயதுக்கு குறைந்தவர்கள் 5 பேரும், 30 - 40 வயதுக்கு உட்பட்டவர்கள் 21 பேரும், 40-50 வயதுக்கு உட்பட்டவர்கள் 60 பேரும், 50-60 வயதுக்கு உட்பட்டவர்கள் 54 பேரும், 60-70 வயதுக்கு உட்பட்டவர்கள் 37 பேரும், 70-80 வயதுக்கு உட்பட்டவர்கள் 9 பேரும் 80-90 வயதுக்கு உட்பட்டவர்கள் 3 பேரும் தெரிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு புதிய உறுப்பினர்கள் 7 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.