புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலை!

புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் தற்போதைய நிலை!

கந்தகாடு மற்றும் சேனாபுர புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் இனங்காணப்பட்ட கொரோனா நோயாளர்களில் தற்போது 62 பேர் மாத்திரமே தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த மத்திய நிலையத்தில் இனங்காணப்பட்ட 629 கொரோனா தொற்றாளர்களில் 567 பேர் தற்போதைய நிலையில் பூரணமாக குணமடைந்துள்ளதாக கொவிட் 19 பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருளுக்கு அடிமையாகி புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, குறித்த புனர்வாழ்வு மத்திய நிலையங்களில் கொரோனா ரீதொற்று வேகமாக பரவத் தொடங்கியது.

அதன் பின்னர், மத்திய நிலையங்களில் இருந்த 508 கைதிகள், அதன் பணியாளர்கள் 72 பேர், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்கு நெருக்கமானவர்கள் 48 பேர் அடங்களாக 629 பேர் கொரோனா தொற்றாளர்களாக இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.