நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

நல்லூர் தெற்கு நுழைவாயிலுக்கான அடிக்கல் நாட்டப்பட்டது!

நல்லூர் கந்தசுவாமி தெற்கு நுழைவாயில் வீதி வளைவுக்கான அடிக்கல்  அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது.

தெற்கு புறமான வீதி வளைவு கோயில் வீதியில் கைலாச பிள்ளையார் கோவிலடியில் அமையவுள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு  இன்று (புதன்கிழமை) காலை நடைபெற்றது.

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்குச் செல்லும் நுழைவாயில்களான நான்கு பிரதான வீதிகளிலும் வீதி வளைவுகள் அமைக்கப்படவுள்ளன.

இதன் முதல் கட்டமாக கிழக்கு புறம் செம்மணி வீதியில் வீதி வளைவு கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன.