இரு சக்திவாய்ந்த பூமியதிர்ச்சி - இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கையா? சற்றுமுன் வெளியான அறிவிப்பு
இந்தோனேசியாவின் சுமத்ரா தீவு பகுதியில் அடுத்தடுத்து இரு சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.
உள்ளூர் நேரப்படி இன்று காலை 5.23 மணிக்கு முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.8 ஆக பதிவாகி இருந்தது.
அடுத்த 6-வது நிமிடத்தில் மற்றொரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 6.9 ஆகவும் பதிவாகி இருந்தது.
முதலாவது நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 22 கி.மீ ஆழத்திலும் 2-வது நிலநடுக்கம் 26 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டது.
எனினும் அடுத்தடுத்த இந்த இரு நிலநடுக்கங்களால் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கைக்கும் சுனாமி ஏற்பட வாய்ப்பில்லை என்று பேரிடர் மேலாண்மை மையம் சற்றுமுன் அறிவித்துள்ளது.
மேலும் மக்கள் அச்சமடைய வேண்டாம் என்றும் அறிவிப்பு விடுத்துள்ளது.