கோட்டாபய பிறப்பித்திருந்த உத்தரவு! அமைச்சு வெளியிட்டுள்ள உத்தரவாதம்

கோட்டாபய பிறப்பித்திருந்த உத்தரவு! அமைச்சு வெளியிட்டுள்ள உத்தரவாதம்

சிங்கராஜ பிரதேசத்தின் நெலுவ - லங்காகம சாலை திட்டத்தினால் சூழல் உணர்திறன் கொண்ட 1.1 கி.மீற்றர் பரப்பளவில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இந்த திட்டத்தை நெடுஞ்சாலை அமைச்சு மேற்கொள்ளக் கூடாது என்று ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ வனவிலங்கு அமைச்சருக்கு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளார்.

சுமார் 18 கி.மீ நீளமுள்ள கிராமப்புற சாலையை அபிவிருத்தி செய்யவேண்டும் என்று அந்தப்பகுதியில் வசிப்பவர்கள் விடுத்த வேண்டுகோளின் பேரில் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே வரலாற்று சின்னமான சிங்கராஜ வனப்பகுதியில் வீதி அமைப்பு மேற்கொள்ளப்படுவதாக கூறி ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ நிறுவனத்துக்கு இலங்கையின் சுற்றாடல் அமைப்பு ஒன்று முறையிட்ட நிலையிலேயே இந்த கருத்தை அமைச்சு வெளியிட்டுள்ளது.