ஒரு கோடியே 20 லட்சம் பெறுமதியான ஹெரோயின் ; 4 பேர் கைது

ஒரு கோடியே 20 லட்சம் பெறுமதியான ஹெரோயின் ; 4 பேர் கைது

ஒரு கோடியே 20 லட்சம் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருட்களுடன் 4 பேர் பாதுக்கை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹெரோயின் போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ள இரண்டு சந்தேகநபர்கள் பாதுக்கை பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய கொலன்னாவை பகுதியில் ஹெரோயின் வர்த்தகத்துடன் தொடர்புடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேகநபர்களிடம் இருந்து ஆயிரத்து 100 கிராம் ஹெரோயின் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.