மின்சார விநியோகத் தடை தொடர்பான விபரங்கள்

மின்சார விநியோகத் தடை தொடர்பான விபரங்கள்

நேற்று முதல் எதிர்வரும் நான்கு நாட்களுக்கு மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ள ஒரு மணி நேர மின்சார விநியோகத் தடை தொடர்பான விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஏ,பி,சி.டி, என்ற 4 வலயங்களாக மின்சாரத் தடை ஏற்படுத்தப்படும் பிரதேசங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதன்படி மாலை 6 மணி முதல் 7 மணி வரையில் ஏ வலயத்திலும் 7 மணி முதல் 8 மணி வரையில் பி வலயத்திலும் மின்சார விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இரவு 8 மணி முதல் 9 மணி வரையில் சி வலயத்திலும் 9 மணி முதல் 10 மணி வரை டி வலயத்திலும் மின்சாரத் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.