இரகசிய தகவலை அடுத்து துப்பாக்கியுடன் ஒருவர் கைது

இரகசிய தகவலை அடுத்து துப்பாக்கியுடன் ஒருவர் கைது

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடியன் கட்டுத்துவக்கொன்றினை வைத்திருந்த நபர் ஒருவரை இன்று(18) கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர்.

மஜித்நகர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரே கைது செய்யப்பட்டவராவார்.

சந்தேக நபர் குரங்கு பாஞ்சான் கிரான் பகுதியில் இடியன் கட்டுத் துவக்கொன்றினை வைத்திருந்த நிலையில் கிண்ணியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.