விசாரணைக்கு அழைக்கப்பட்டார் சம்பந்தன்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழு தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான சம்பந்தனை விசாரணைக்கு அழைத்துள்ளது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 07ஆம் திகதி விசாரணைக்கு ஆஜராகும்படி அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.
இதேவேளை அன்றையதினம் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க, முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், முன்னாள் அமைச்சர்களான மங்கள சமரவீர, சம்பிக்க ரணவக்க உள்ளிட்டவர்களையும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.