31 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில்

31 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில்

சிறை கைதிகளுக்கு வசதிகளை வழங்கிய குற்றச்சாட்டில் கைதான நீர்கொழும்பு முன்னாள் சிறைச்சாலை அதிகாரி அநுருத்த சம்பாயோ உள்ளிட்ட 4 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இன்றைய தினம் நீர்கொழும்பு பிரதான நீதவான் ரஜூன்ரா ஜயசூரிய முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.

இதன்படி குறித்த நான்கு பேரையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 11 நாட்களின் பின்னர் அநுருத்த சம்பாயோ குருநாகல் பகுதியில் வைத்து கடந்த 2 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.