இலஞ்சம் பெற முயற்சித்த உத்தியோகத்தர் கைது

இலஞ்சம் பெற முயற்சித்த உத்தியோகத்தர் கைது

நகர அபிவிருத்தி அதிகார சபையின் தம்புள்ளை காரியாலய உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்சம் பெற முயற்சித்த போது ஊழல் தடுப்பு ஆணைக்கு உத்தியோகத்தர்களினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வயல் நிலப்பரப்பில் வீடு அமைத்த நபர் ஒருவரிடம் 50 ஆயிரம் ரூபா பணத் தொகையினை இன்று மதிய பெற்றுக் கொள்ள முயற்சித்த போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கலேவல பிரதேச நபர் ஒருவரிடம் இவ்வாறு குறித்த உத்தியோகத்தர் இலஞ்சம் பெற முயற்சித்த போது கைது செய்யப்பட்டத்தனை தொடர்ந்து தம்புள்ளை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.