இராஜ்க்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் முக்கிய பதவி!
பிரபல சிங்கள பாடகர் இராஜ் வீரரத்ன மற்றும் பாடகி திகானி இமாரா ஆகியோர் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்
விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷவினால் இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் அடுத்த மூன்றாண்டுகளுக்கு இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது.
இராஜ் வீரரத்ன, கடந்த ஜனாதிபதி தேர்தல் மற்றும் கடந்த பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவான பிரச்சாரங்களை முன்னெடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.