தடம் புரண்ட தொடரூந்து..

தடம் புரண்ட தொடரூந்து..

நானுஓய தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்த தொடரூந்து வடவல மற்றும் கலபட தொடரூந்து நிலையங்களுக்கு இடையில் இன்று காலை தடம் புரண்டுள்ளது.

இந்நிலையில் சரி செய்யும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்

தொடரூந்து தடம் புரண்டதன் காரணமாக கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை வரை பதுளை தொடக்கம் கொழும்பு கோட்டை வரை பயணிக்கும் பொடி மெனிக்கே மற்றும் உடரட மெனிக்கே தொடரூந்துகள்தடம் புரண்ட பகுதி வரை பயணித்தது.

இந்நிலையில் தொடரூந்து பயணிகளை மற்றும் ஓர் பயணிகள் தொடரூந்து மூலம் அழைத்து செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.