அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை: பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பான விசாரணை: பல அரசியல்வாதிகளுக்கு அழைப்பு

அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அடுத்த மாதம் முன்னிலையாகுமாறு முன்னாள் பிரதமர் உட்பட பலருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்கள் மங்கள சமரவீர, பட்டாலி சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா, நாடாளுமன்ற உறுப்பினர்களான அனுர குமார திசாநாயக்க, இரா.சம்பந்தன், ரவூப் ஹக்கீம் மற்றும் மேலும் ஒரு சிலருக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி செப்டம்பர் 07 ஆம் திகதி அன்று அரசியல் பழிவாங்கல் தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அவர்கள் கோரப்பட்டுள்ளனர்.