இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 134 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான 134 பேர் சிகிச்சையில் உள்ளனர்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 79 பேர் குணமடைந்து இன்று (செவ்வாய்க்கிழமை) வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா வைரஸிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 755 ஆக உயர்வடைந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகள் மற்றும் சிகிச்சை நிலையங்களில் 134 கொரோனா தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இதேநேரம் இலங்கையில் இதுவரையில் 2 ஆயிரத்து 900 பேர் கொரோனா வைரஸ்  தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் 2 ஆயிரத்து 755 பேர் குணமடைந்துள்ளதுடன், 134 பேர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அதேநேரம் ஏனைய 11 பேரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.