பிள்ளையானுக்கு அனுமதி...!

பிள்ளையானுக்கு அனுமதி...!

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், பொதுத் தேர்தலில் நாடாளுமன்றத்திற்கு தெரிவான தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன், 9 அவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவரது கட்சியினரும், சிறைச்சாலைகள் தரப்பினரும் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக எமது நீதிமன்ற செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை வழக்கில், சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள அவர், 4 வருடங்களுக்கு அதிக காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.