மின்சார விநியோகத்தடை குறித்து ஆராயும் குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

மின்சார விநியோகத்தடை குறித்து ஆராயும் குழுவின் விசாரணைகள் ஆரம்பம்

நாட்டில் நேற்று திடீரென ஏற்பட்ட மின்சார விநியோகத்தடை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட விசாரணைக்குழு, இன்றைய தினம் கூடி ஆராய்ந்துள்ளது.

எதிர்வரும் ஒரு வாரத்திற்குள் சம்பவம் தொடர்பான அறிக்கையை முன்வைப்பதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

குறித்த சம்பவத்திற்கான காரணம் தொடர்பை உரிய முறையில் கண்டறிவதுடன், இதற்கு முன்னர் ஏற்பட்ட இதுபோன்ற நிலைமைகளில் கையாளப்பட்ட நடவடிக்கை என்பன தொடர்பில் ஆராய்வது இந்தக் குழுவின் பணியாக உள்ளது.

அதேநேரம், எதிர்காலத்தில் இவ்வாறான நிலைமைகள் ஏற்படாமல் இருப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கை தொடர்பிலும், இந்தக் குழு ஆராய உள்ளது.

இந்த நிலையில், அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆரயப்படுகின்ற நிலையில், அது குறித்த தற்போது கருத்து தெரிவிக்க முடியாது என்று மின்சக்தி துறை அமைச்சின் பேச்சாளர் சுலக்ஷண ஜயவர்தன தெரிவித்துள்ளார்

தற்போது செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல்மின் நிலையத்தின் மின்பிறப்பாக்கியின் பணிகளை மீண்டும் வழமைக்கு கொண்டுவருதற்கு, மூன்று நாட்களுக்கும் அதிகமான காலம் எடுக்கும் என இலங்கை மின்சார சபையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.