முன்னாள் அமைச்சர் ஒருவரின் அதிசொகுசு ஓய்வறை கண்டுபிடிப்பு...!

முன்னாள் அமைச்சர் ஒருவரின் அதிசொகுசு ஓய்வறை கண்டுபிடிப்பு...!

கொழும்பு - வொக் ஷோல் வீதியில் மொத்த கூட்டுறவு விற்பனை நிலைய கட்டிட தொகுதியின் 8 ஆவது மாடியில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் பயன்படுத்திய அதிசொகுசு ஓய்வறை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஓய்வறையில் அதிசொகுசுடன் கூடிய நித்திரைகொள்ளும் அறை ஒன்றும் அறைக்கு வெளியே காணப்பட்ட பிரிதொரு இடத்தில் அதிக விலைகொண்ட சாய்வு கதிரை ஒன்றும், புதிய தொழிநுட்பத்தினாலான ஒலி, ஒளிக்கருவிகள் மற்றும் ப்ரொஜெக்டர் என அழைக்கப்படும் காணொளி கருவி ஒன்றும் குறித்த ஓய்வரையிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு காணப்படும் குறித்த ஓய்வறையை அந்த இடத்திலிருந்து முழுமையாக அகற்றுமாறு வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளதோடு, இது தொடர்பில் முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீனிடம் விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

குறித்த ஓய்வறையானது தாம் அமைச்சு பதவியினை பொறுப்பேற்பதற்கு முன்னரே அமைக்கப்பட்டது என்று முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.