எங்கள் படையினரை கைவிடும் தரப்பாக நாங்கள் இருக்கமாட்டோம் - புதிய அமைச்சர் உறுதி

எங்கள் படையினரை கைவிடும் தரப்பாக நாங்கள் இருக்கமாட்டோம் - புதிய அமைச்சர் உறுதி

இலங்கை அனைத்து நாடுகளுடனும் நட்புறவு என்றகொள்கையை பின்பற்றும் என புதிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

நெருக்கடியின் போதும் மகிழ்ச்சியின் போதும் நட்புறவு என்ற கொள்கையை இலங்கை பின்பற்றும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அணிசேரா பக்கச்சார்பற்ற நட்புறவை கொண்ட வெளிவிவகார கொள்கையை ஜனாதிபதி அறிவித்துள்ளார்.

எங்களுக்கு எதிரிகள் இல்லை,நண்பர்கள் மாத்திரமே உள்ளனர் என தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் உலகம் முழுவதும் இலங்கை இதன் காரணமாகவே மதிப்பை பெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சுயாதீன இறைமையுள்ள நாடு என்ற வகையில் எங்கள் அரசமைப்பை மீறும் அல்லது எங்களது வீரதீர படையினரை காப்பாற்றுவதை கைவிடும் தரப்பாக நாங்கள் இருக்கமாட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.