புதிய அமைச்சர்கள் சிலர் கடமைகளை பொறுப்பேற்றனர்..

புதிய அமைச்சர்கள் சிலர் கடமைகளை பொறுப்பேற்றனர்..

புதிய அமைச்சர்கள் சிலர் இன்றைய தினம் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுள்ளனர்.

நிதியமைச்சரான பிரதமர் மகிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் அமைச்சு பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

சர்வமத தலைவர்களின் மத அனுஸ்ட்டானங்களுடன் அவர் இந்த பொறுப்பினை ஏற்றுக்கொண்டதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்போது புதிதாக அச்சிடப்பட்டுள்ள 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள், மத்திய வங்கியின் ஆளுநரால் பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீர்பாசன அமைச்சரான சமல் ராஜபக்ஸ கொழும்பு - டார்லி வீதியில் அமைந்துள்ள நீர்பாசன அமைச்சில் தமது பொறுப்புக்களை இன்றைய தினம் ஏற்றுக்கொண்டார்.

இதனையடுத்து உள்ளக பாதுகாப்பு, உள்நாட்டலுவல்கள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ இராஜாங்க அமைச்சிக்களின் பொறுப்புக்களையும் சமல் ராஜபக்ச ஏற்றுக்கொண்டார்.

இதேவேளை, கொள்ளுபிட்டியவில் அமைந்துள்ள கைத்தொழில் அமைச்சில் அமைச்சர் விமல் வீரவங்ச தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

இதனையடுத்து ஊடகங்கள் மத்தியில் உரையாற்றிய அவர், 19 ஆவது அரசியலமைப்பு சீர்த்திருத்தத்தின் மூலம் நாட்டின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை நீக்கி, ஜனாதிபதிக்கு மக்களால் வழங்கப்பட்டுள்ள ஆணைக்கமைய அதிகாரங்களை மீண்டும் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டார்.

19 அரசிலமைப்பை தயாரித்தவர்கள் கூட அதில் பாரிய சிக்கல்கள் நிலவுவதை உணர்ந்து கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

முதலில் அந்த சிக்கல்களை நீக்க வேண்டியது அத்தியாவசியமானது.

இந்த அரசாங்கத்தை மற்றும் நாட்டு மக்களை வலுப்படுத்துவதற்காக புதிய அரசியலமைப்பின் கீழ் நாட்டை கொண்டுவருவதற்கான செயற்பாடுகளை விரைவில் முன்னெடுக்கப்படும் என அமைச்சர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஆகியோர் தமது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டனர்.

நீதிமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட அலி சப்ரி இன்று தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.