வழமைக்கு திரும்பியது மின்விநியோகம்
கெரவலபிட்டிய மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பரிமாற்றக் கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக தடைப்பட்டிருந்த மின் விநியோகம் தற்சமயம் சீர் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற் குறித்த பகுதியில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறை சீர்செய்யும் நடவடிக்கைகள் துரிதமாக முன்னெடுக்கப்பட்டன.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளிலும் மின்விநியோகம் சீர்செய்யப்பட்டுவிட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இதேவேளை தற்போது வரையில் வடக்கு, வட மத்திய, ஊவா மாகாணத்தில் மின்சாரம் இன்னமும் வழமைக்கு திரும்பவில்லை என குறிப்பிடப்படுகின்றது.