70 மில்லியன் அமெரிக்க டொலர் : வெளியிடப்பட்டுள்ள தகவல்
ஈ.டி.ஐ நிறுவனத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்கள் ஊடாக சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் கிடைக்கப்பெற்றுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஈ.டி.ஐ நிறுவனத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் முறைக்கேடுகள் தொடர்பில் ஆராயும் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணையின் போது இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவில் இன்றைய தினம் வங்கி உதவி முகாமையாளர் ஒருவர் சாட்சியம் வழங்கியிருந்தார்.
ப்ளு சமிட் கெபிட்டல் தனியார் நிறுவனம் மற்றும் பென் ஹோல்டிங்ஸ் நிறுவனம் உள்ளிட்ட மேலும் சில வெளிநாட்டு நிறுவனங்கள் ஈ.டி.ஐ நிறுவனத்திற்கு சுமார் 70 மில்லியன் அமெரிக்க டொலர் பணத்தினை வழங்கியுள்ளதாக அவர் ஆணைக்குழுவில் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக அந்த வங்கி கணக்கிற்கு கடந்த வருடம் மார்ச் மாதம் பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அத்துடன் எலெக்ஸ் இந்திரஜித் லவேல் என்பவரின் வங்கி கணக்கில் இருந்து சுமார் 200 மில்லியன் ரூபாய் பணம் ஈ.டி.ஐ நிறுவனத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக வங்கி உதவி முகாமையாளர், ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று சாட்சியம் வழங்கியுள்ளார்.