ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி முன்னிலையாகுமாறு உத்தரவு

ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதி முன்னிலையாகுமாறு உத்தரவு

ஏப்ரல் 21 தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் 26 ஆம் திகதி குறித்த ஆணைக்குழுவின் காவல்துறை பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 21 தாக்குதல்கள் இடம்பெறும் போது நாட்டின் பாதுகாப்பு நிலைமை தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் ஜனாதிபதி இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல்கள் இடம்பெறும் வேளை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக கடமையாற்றிய ருவண் விஜயவர்தன, நாளைய தினம் ஜனாதிபதி ஆணைக்குழுவின் காவல்துறை விசாரணை பிரிவில் முன்னிலையாகுமாறு இதற்கு முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் 21 ஆம் திகதி முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் சட்டம் மற்றும் ஒழுங்கு தொடர்பான முன்னாள் அமைச்சர் சாகல ரத்னாயக்கவும் ஏப்ரல் 21 தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.