கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த மேலும் 4 பேர்..!
கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் நான்கு தொற்றாளர்கள் பூரண குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,670ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை, இலங்கையில் இதுவரையில் கொவிட் 19 தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 2,890ஆக பதிவாகியுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 213 தொற்றாளர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.