முதன் முறையாக காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுக்கொண்டு ஓமான் நோக்கி பறந்த விமானம்
தேசிய காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றிக்கொண்டு முதன்முறையாக மத்தல மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமானம் ஒன்று இன்று அதிகாலை ஓமானின் மஸ்கட் நோக்கி புறப்பட்டுச் சென்றது.
இன்று (16) அதிகாலை 12.30 மணியளவில் மத்தல மஹிந்த ராஜபக்ஷ விமான நிலையத்திலிருந்து குறித்த விமானம் புறப்பட்டுச் சென்றதாக விமான நிலைய பொது முகாமையாளர் உபுல் கலன்சூரியா தெரிவித்துள்ளார்.
உள்ளூர் காய்கறிகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதற்கான விசேட வேலைத் திட்டத்தின் கீழ் முதன்முறையாக சுமார் 3371 கிலோ உள்நாட்டு உற்பத்தி ஊடாக பெறப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள் இவ்வாறு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.