வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் முக்கிய அறிவிப்பு
உலகம் முழுவதும் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமை காரணமாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நிதி ரீதியான பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது.
இதன் காரணமாக வெளிநாடுகளில் பணிப்புரியும் பணியகத்தின் ஊழியர்களை நாட்டுக்கு திரும்ப அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.
வெளிநாடுகளில் கடமையாற்றும் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் ஊழியர்களை நாட்டுக்கு திரும்ப அழைப்பது தொடர்பாக அமைச்சரவை பத்திரம் விரைவில் தாக்கல் செய்யப்படும் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மத்திய கிழக்கு, இத்தாலி, சிங்கப்பூர் மலேசியா, தென் கொரியா போன்ற நாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளை இழந்துள்ளனர்.
இந்த நாடுகளில் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகள், அங்குள்ள இலங்கை தூதரகங்களுடன் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
தொழில் வாய்ப்புகள் குறைந்துள்ளதால், பணியகம் நிதி ரீதியான பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.