200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது

200 மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு: ஒருவர் கைது

அம்பலாங்கொடை கடற்கரை பகுதியில் சுமார் 12 கிலோகிராம் நிறையுடைய ‘மெண்டி’ எனப்படும் போதைப்பொருளுடன்  ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நேற்று (சனிக்கிழமை) மாலை, கல்கிஸை பொலிஸ் சிறப்புக் குழுவினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போதே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் கைது செய்யபட்ட சந்தேகநபரிடமிருந்த  மீட்கப்பட்ட போதைப்பொருளின் பெறுமதியானது 200 மில்லியன் ரூபாய்க்கு அதிகம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த போதைப்பொருள் கடல் மார்க்கமாக நாட்டிற்குள் எடுத்துவரப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.