பயிற்சி பெற்ற 25 மோப்ப நாய்கள் தொடர்பில் பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு எடுத்த நடவடிக்கை!
கண்டியில் உள்ள பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவில் இணைக்கப்பட்டு பயிற்சி பெற்ற 25 மோப்ப நாய்கள் நேற்று ஏலம் விடப்பட்டுள்ளன.
நாட்டின் பல பகுதிகளில் பாரிய அளவிலான குற்றங்களை கண்டறியும் நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்ட பல நாய்களே இவ்வாறு ஏலம் விடப்பட்டுள்ளன.
10 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நாய்கள் சேவையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என பொலிஸ் மோப்ப நாய்ப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த ஏல நடவடிக்கையின் மூலம் பொலிஸ் பிரிவுக்கு 315,800 ரூபா வருமானம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதிலும் Laboador இன நாயொன்று 101,000 ரூபாவிற்கு ஏலத்தில் விற்பனையானது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
ஜூன் 18, 2018 அன்று பிறந்த இந்த நாய், பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.