தொலைபேசியால் காலையிழந்த பரிதாபம்! யாழில் சம்பவம்

தொலைபேசியால் காலையிழந்த பரிதாபம்! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் ரயிலுடன் மோதுண்டு ஒருவர் விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இச்சம்பவம் இன்று அதிகாலை சாவகச்சேரி, சங்கத்தானை ரயில் கடவையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலுடன் சங்கத்தானை பகுதியில் தொலைபேசியில் உரையாடியபடி, தண்டவாளத்தில் கடந்து செல்ல முற்பட்ட வேளையில் அவர் ரயிலுடன் மோதுண்டு கீழே விழுந்துள்ளார்.

கீழே விழுந்த நபர் தன்னைச் சுதாகரித்துக் கொண்டு தண்டவாளத்திலிருந்து வெளியேற முயன்றபோதும், அவரது கால் தண்டவாளத்தில் சிக்கியுள்ளது. இதனால் அவரது காலொன்று துண்டிக்கப்பட்டது.

தென்பகுதியை சேர்ந்த நபரே இந்த விபத்தில் சிக்கியுள்ளார். உடனடியாக அவர் சாவகச்சேரி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.