பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகருக்கும் கடற்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையிட் மக்சுமுல் ஹக்கீமுக்கும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை கடற்படை தலைமையகத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
பதவிக் காலம் நிறைவடைந்தமையை முன்னிட்டு பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் சையிட் மக்சுமுல் ஹக்கீம், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவை சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கை கடற்படைக்கு அளித்த ஒத்துழைப்புக்காக, பங்களாதேஷ் பாதுகாப்பு ஆலோசகருக்கு நன்றி தெரிவித்ததுடன் அவரின் எதிர்கால நடவடிக்கைகளுக்கும் கடற்படைத் தளபதி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
மேலும் குறித்த சந்திப்பை நினைவு கூறும் வகையில் பங்களாதேஷ் உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.