தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அதிகாரம் தொடர்பில் கருத்து முரண்பாடு

தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அதிகாரம் தொடர்பில் கருத்து முரண்பாடு

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதன உயர்வுக்கான கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தையில் ஈடுபடும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் அதிகாரம் தொடர்பில் கருத்து முரண்பாட்டு நிலை ஏற்பட்டுள்ளது.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் உத்தியோகபூர்வ பொதுச்செயலாளர் பதவியில் தானே நீடிப்பதாகவும், கூட்டு ஒப்பந்த பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் அதிகாரம் தமக்கே இருப்பதாகவும் ஆர்.யோகராஜன் தெரிவித்தார்.

இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் பதவி குறித்து ஏற்பட்டுள்ள பிரச்சினை தொடர்பில் எமது செய்தி சேவை வினவியபோது அவர் இதனை குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடுவதில் தனக்கே அதிகாரம் உள்ளதாக பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் எமது செய்திச் சேவை வினவியபோது அவர் இதனைத் தெரிவித்தார்.