இலங்கையில் சீன நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

இலங்கையில் சீன நாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி

சீனா நாட்டவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கான சுற்றுலா விசாவை பெறும் விண்ணப்பத்தை சீனாவின் உத்தியோகபூர்வ மொழியான மெண்டரின் மொழியில் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான உடன்படிக்கையில் இலங்கை குடிவரவு திணைக்களம் மற்றும் சீனாவின் சர்வதேச சிறப்பு பய சேவை நிறுவனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று கையெழுத்திட்டுள்ளனர்.

கொழும்பில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் , வெளிநாட்டுப் பயணிகளுக்காக இலத்திரனியல் முறையில் அனுமதி வழங்கும் நடைமுறைகளை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது.