புறக்கணிப்பட்டுள்ள 12 ஆயிரம் பட்டதாரிகள்!

புறக்கணிப்பட்டுள்ள 12 ஆயிரம் பட்டதாரிகள்!

வேலையற்ற பட்டதாரிகளை அரச சேவையில் இணைக்கும் திட்டத்தில் சுமார் 12 ஆயிரம் பட்டதாரிகள் இணைக்கப்படவில்லை என பட்டதாரிகளுக்கான தேசிய மையத்தின் இணைப்பாளர் சந்தன சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

குறித்த வேலைத்திட்டம் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 02ஆம் திகதி நடைமுறைக்கு வரவுள்ள நிலையில் இத்திட்டத்தின் கீழ் பட்டதாரிகள் அனைவரும் இணைக்கப்பட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த திட்டம் ஆரம்பிக்கப்படுவதில் எமக்கு எவ்வித கவலையும் இல்லை.

எனினும் 12 ஆயிரம் பட்டதாரிகளும் தகுதி வாய்ந்தவர்கள். ஆனால் அவர்கள் இத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை.

சமனான தகுதிகளில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகளை தேர்ந்தெடுக்கும் போது 12 ஆயிரம் பட்டதாரிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.