கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு அதிகாரிகள்
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பாக ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு, நீர்கொழும்பு கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளது.
இன்று முற்பகல் 11.20 அளவில் கட்டுவாப்பிட்டி தேவாலயத்திற்கு சென்ற அதிகாரிகள் குழு, சுமார் ஒரு மணிநேரம் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது.
ஏப்ரல் 21 தாக்குதல் நடத்தப்பட்டிருந்த புனித செபஸ்ட்டியன் தேவாலயத்தின்அருட்தந்தை மஞ்சுள நிரோஷனை கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்ட ஆணைக்குழுவின் தவிசாளர் உள்ளிட்ட குழுவினர் சந்தித்து கலந்துரையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.