கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு வியட்நாம் இலங்கைக்கு நன்கொடை

கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு வியட்நாம் இலங்கைக்கு நன்கொடை

கொரோனா வைரஸ் தொற்றை  கட்டுப்படுத்தும் செயற்றிட்டத்துக்கு உதவும் வகையில் 30,000 அமெரிக்க டொலர்கள் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வியட்நாம் நன்கொடையாக வழங்கியுள்ளது.

வியட்நாம் வெளிவிவகார அமைச்சில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

வியட்நாம் வெளிவிவகார பிரதியமைச்சர் குயென் குவோக் டன்க், வியட்நாமிற்கான இலங்கைத் தூதுவர் பிரசன்ன கமகேவிடம் குறித்த மருத்துவ உபகரணங்களை கையளித்துள்ளார்.

இதன்போது இருநாடுகளுக்கும் இடையில் நீண்டகாலமாகப் பேணப்பட்டுவரும் நட்புறவு தொடர்பாக நினைவுகூரப்பட்டுள்ளது.

அதேவேளை கொவிட்- 19 தொற்றுநோய் போன்ற நெருக்கடி நிலைமைகள், சர்வதேச நாடுகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியதன் கட்டாயத்தை உணர்த்துவதாகவும் அவர் தெரிவித்தார்.

இதன்போது தூதுவர் பிரசன்ன கமகே,  வியட்நாம் வழங்கியிருக்கும் நன்கொடைக்கு இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவித்ததுடன் வியட்நாமுடன் ஒன்றிணைந்து  பணியாற்றுவதற்கு இலங்கை விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை அவுஸ்ரேலியா 23.4 மில்லியன் ரூபாய் பெறுமதியான சுகாதார உபகரணங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியா பாதுகாப்பு திணைக்களம் குறித்த சுகாதார உபகரணங்களை இலங்கை கடற்படைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.