புதிய நாடாளுமன்றின் சபை முதல்வர் யார்? வெளிவந்த தகவல்

புதிய நாடாளுமன்றின் சபை முதல்வர் யார்? வெளிவந்த தகவல்

நாடாளுமன்ற சபை முதல்வராக மீண்டும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவை நியமிப்பது தொடர்பில் யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணாடோவை நியமிப்பது தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கு முன்னர் இவர் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளராக செயலாற்றி இருந்தார்.

எனினும் குறித்த பதவிகள் தொடர்பில் இதுவரையில் இறுதி தீர்மானம் எட்டப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

இதேவேளை எதிர்க் கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிக்காக ஐக்கிய மக்கள் சக்தியின் 4 உறுப்பினர்களின் பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹாஷிம், லக்க்ஷமன் கிரியெல்ல, பாட்டலி சம்பிக்க ரணவக்க மற்றும் கலாநிதி ஹர்ஷ டி சில்வா ஆகியோரின் பெயர்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

இதேநேரம், புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாபா அபேவர்தனவை நியமிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அரச வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன