பாரதத்தின் 74ஆவது சுதந்திர தினம் யாழிலும் கொண்டாடப்பட்டது

பாரதத்தின் 74ஆவது சுதந்திர தினம் யாழிலும் கொண்டாடப்பட்டது

பாரத நாட்டின் 74ஆவது சுதந்திர தினம் யாழ்ப்பாணத்திலும் கொண்ட்டாடப்பட்டது.

அதற்கமைய யாழில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் இன்று (சனிக்கிழமை) சுதந்திர தின நிகழ்வுகள் இடம்பெற்றன.

இதன்போது, துணை தூதுவர் சங்கர் பாலச்சந்தர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து, பாரத ஜனாதிபதி கோவிந்நாத் சிங் இந்திய மக்களுக்கு ஆற்றிய உரையை வாசித்தார்.

அதனைத் தொடர்ந்து, இசை நிகழ்வுகளும், மரநடுகைகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.