சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பான நாடாக அறிவிக்கப்பட்ட இலங்கை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த நடவடிக்கை மூலம் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பாக பயணிக்க கூடிய நாடாக இலங்கையை பெயரிடுவதற்கு உலக சுற்றுலா மற்றும் சுற்றுலா சபை பரிந்துரை செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட இந்த பரிந்துரைக்கமைய இதுவரையில் இலங்கைக்கு விஜயம் செய்வதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டியுள்னளர்.
இந்நிலையில் தென்னிலங்கையின் பாரம்பரிய கிராமப்புற மீன்பிடி கலாச்சாரத்தின் மீது சுற்றுலாப் பயணிகளின் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
பல வெளிநாட்டவர்கள் இந்த வகையான மீன்பிடித்தலைப் பார்ப்பதற்கும், அதில் சுறுசுறுப்பாக இருப்பதற்கும், அதனுடன் நினைவு பரிசுகளை உருவாக்குவதற்கும் விரும்புவாக தெரிவிக்கப்படுகிறது.