இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் தற்போதைய நிலவரம்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 886 ஆக உயர்வடைந்துள்ளது.
நேற்று (வெள்ளிக்கிழமை) மாத்திரம் 4பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்பிய மேலும் 3 பேருக்கும், ஜப்பானில் இருந்து இலங்கை வந்த ஒருவருக்கும் இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 12 பேர் பூரண குணமடைந்து நேற்று வீடுகளுக்குத் திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இரண்டாயிரத்து 658 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, வைரஸ் தொற்றினால் இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.