மடு திருவிழாவிற்கு படையெடுக்கும் மக்கள்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழாவானது நாளைய தினம் இடம் பெறவுள்ளது.
இந்நிலையில் நாட்டின் பல பகுதிகளில் உள்ள மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி பாதயாத்திரைகள் மூலம் விசேட ஆராதனைக்காக திருத்தலத்திற்கு வருகை தந்துள்ளனர்.
மன்னார் மறை மாவட்ட ஆயர் பேரருட்கலாநிதி இம்மானுவெல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் அனுராதபுரம், கண்டி, காலி மறைமாவட்ட ஆயர்களின் கூட்டுத்திருப்பலியுடன் காலை 6.15 மணியளவில் திருவிழா இடம்பெற்றவுள்ளது.
திருவிழாவில் கலந்துகொள்ளும் அனைவரையும் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.