பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிய நபர் தூக்கிட்டு தற்கொலை..!
பெண்ணொருவரை கூரிய ஆயுதத்தினால் தாக்கிவிட்டு, நபரொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று யக்கல பகுதியில் இடம்பெற்றுள்ளது. யக்கல-பெதும்மஹர பகுதியில் நேற்று பிற்பகல் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலுக்கு இலக்காகி பலத்த காயங்களுக்கு உள்ளான பெண் கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் கம்பஹா பகுதியில் வசித்து வந்த 63 வயதுடைய நபர் என தெரிவிக்கப்படுகிறது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.