எம்.சி.சி உடன்படிக்கையை நான் அனுமதிக்கவில்லை

எம்.சி.சி உடன்படிக்கையை நான் அனுமதிக்கவில்லை

எம்.சி.சி எனப்படும் மிலேனியம் சவால் ஒத்துழைப்பு உடன்படிக்கையை தாம் அனுமதித்துள்ளதாக வெளியாகும் தகவலை முற்றாக நிராகரிப்பதாக சட்டமா அதிபர் தப்புல டி லிவேறா தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை குறித்து தொடர்ந்தும் ஆராய்ந்து வருவதாக சட்டமா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

மிலேனியம் சாவால் ஒத்துழைப்பு உடன்படிக்கைக்கு சட்டமாதிபர் அனுமதி வழங்கியதாக வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவையாகும்.

அவ்வாறு வெளியிடப்பட்ட தகவில் இணைக்கப்பட்டுள்ள கடிதம் 2018 இல் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே. தற்போதைய சட்டமா அதிபரால் குறித்த உடன்படிக்கை தொடர்பில் எந்தவித நிலைப்பாடும் வெளியிடப்படவில்லை என சட்டமா அதிபரின் இணைப்பு அதிகாரி. அரச சட்டவாதி நிஷாரா ஜயரட்ன தெரிவித்துள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் மிலேனியம் சாவால் ஒத்துழைப்பு தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவின் இறுதி அறிக்கையினை கொண்டு சட்டமாதிபரின் நிலைப்பாடு அறிவிக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.