தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை

தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை

முப்படையினால் நிர்வகிக்கப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 30 ஆயிரத்து 184 பேர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்றைய தினம் வரை 43 தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 4 ஆயிரத்து 461 பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இதுவரை PCR பரிசோதனைகள் ஒரு இலட்சத்து 82 ஆயிரத்து  681 மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை , இந்தியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய கடந்த 24 மணித்தியாலங்களில் 64 ஆயிரத்து 553 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன் குறித்த காலப்பகுதியில் இந்தியாவில் ஆயிரத்து 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதற்கமைய இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 61 ஆயிரத்து 190 ஆக அதிகரித்துள்ளதோடு 48 ஆயிரத்து 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

10 நாட்களாக இந்தியாவில் கொவிட்-19 தொற்றுறதியாகின்றவர்கள் அதிகளவில் அடையாளம் காணப்படுகின்றனர்.

எவ்வாறாயினும் இந்தியாவில் கொவிட்-19 தொற்றறுதியான 17 லட்சத்து 51 ஆயிரத்து 555 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.

இதேவேளை அவுஸ்ரேலியாவில் கொவிட்-19 தாக்கம் குறைவடைந்து வருவதாக அந்த நாட்டு சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

குறிப்பாக மெல்போர்ன் பகுதியில் தொடர்ந்து முடக்கநிலை அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால் தொற்றின் தாக்கம் குறைவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த புதன்கிழழைம 400 க்கும் மேற்பட்டோருக்கு கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று 290 பேருக்கு மாத்திரம் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

இதற்கமைய அவுஸ்ரேலியாவில் இதுவரையில் 22 ஆயிரத்து 741 பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளதோடு 375 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.

இந்தநிலையில் சர்வதேச ரீதியில் கொவிட்-19 தொற்றுறுதியானவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சத்து 68 ஆயிரத்து 933 ஆக அதிகரித்துள்ளது.

சர்வதேச ரீதியில் 7 லட்சத்து 57 ஆயிரத்து 446 பேர் உயிரிழந்துள்ளனர்.

எவ்வாறாயினும் கொவிட்-19 தொற்றுறுதியான ஒரு கோடியே 39 லட்சத்து 20 ஆயிரத்து 144 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.